மிஸ்ஸிங் மீ Missing Me Lyrics - Dhruv Vikram

மிஸ்ஸிங் மீ | MISSING ME SONG LYRICS IN TAMIL: The song is recorded by Dhruv Vikram from the Tamil film Mahaan, directed by Karthik Subbaraj. The film stars Vikram, Dhruv Vikram, Simha and Simran in the lead role. The music of "MISSING ME" song is composed by Santhosh Narayanan, while the lyrics are penned by Dhruv Vikram.

மிஸ்ஸிங் மீ Lyrics in Tamil

வா வந்தமர்
காது கொடு
நீ முரடன் என்பாய்

அது என் முதல் நிலை என்பேன்
நான் பூக்கள் துறந்தவன்
புழுதி தின்று வந்தவன்
புலிகள் என்னை புசிப்பதில்லை

உங்கள் பெருஆழிவாய்
நான் வருகிறேன்
இங்கு நானே அரசன்
தலை தட்டும் அசுரன்

உன் சுருக்குக் கயிறு
என் நரம்புகளால் பிண்ணப்பட்டது
ஆணோ பெண்ணோ சிசுவோ சிரிப்போ
அதனால் என்ன

அறமே கொல்லும் அரக்கன் நான்
உன் பாவங்கள் மறப்பேன்
உன்னை அழித்து மறப்பேன்
என் இமைகள் களவு போனது

என் இரவு அழுகையை
அரக்கியர் தாய்ப்பால் அணைத்தது
என் சோகம் சவக்குழி இரண்டும்
தின்று உயிர்ப்பித்தேன் எனை
நான் என் ஆயுதம் தாங்க
துடித்த உன் சதைக் கற்றை நலமா

There was once a beast inside me
But he lives here no more.
I am him, he is me
We are one now.
I see a animal lurking in my shadows

don’t ask me why
I am him, he is me
We are one now!

எல்லாம் கடந்திடும் என்பாள் அம்மா
சிரித்திரு என்றும் என்பாள் அம்மா
உண்மை

எனை எதிர்த்த தலைகளை கடந்து போகிறன்
அவள் கேட்ட சிரிப்பு இன்று என் இதழில்
கொன்றவர் கணக்கு நினைவில்லை
மன்னித்தருளும் மனமில்லை

ஆன்மா விற்று ராட்சசி ஒன்று வாங்கி வந்தேன்
அவள் கண்கள் தின்று பறந்து விட்டாள்
என் கண்கள் போனது அய்யோ
நான் வீசிய வாளால் யார் யார்
செத்தார்களோ அய்யோ .. ஹா ஹா

இழந்தது மாயும் கண்கள்
கிடைத்தது காரணங்கள்

என்னை குற்றம் சொல்லாதே
என் வாளில் மோதி
அதைக் காயமுற செய்தவர்களை
தண்டிப்பாயாக

தண்டிப்பாயாக
யாருமில்லையா… அய்யோ
இப்போது யாரு
அரக்கன்
இப்போது யாரு
அரக்கன்

There was once a beast inside me,
But he lives here no more
I am him, he is me
We are one now

I see a animal lurking in my shadows,
don’t ask me why
I am him, he is me
We are one now.

bharatlyrics.com

வருகிறேன்
என் தேர்க்காலில் உன் உயிருடன்
என் தோட்டாவில் உன் பெயருடன்

உன் விதி… என் சதி
என் கணம்… உன் ரணம்
ஒன்று .. இரண்டு… மூன்… நான்கு
நிசப்தம்.

Missing Me Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Missing Me is from the Mahaan.

The song Missing Me was sung by Dhruv Vikram.

The music for Missing Me was composed by Santhosh Narayanan.

The lyrics for Missing Me were written by Dhruv Vikram, Vivek Velmurugan.

The music director for Missing Me is Santhosh Narayanan.

The song Missing Me was released under the Sony Music South.

The genre of the song Missing Me is Hip Hop.