NEDUMARAM SONG LYRICS IN TAMIL: 'நெடுமரம்' The song is sung by Pradeep Kumar and Annie J from the soundtrack album for the Tamil film J Baby, directed by Suresh Mari, starring Dinesh, Urvasi, Maran, Kavitha Bharathy and Jaya Murthy. "NEDUMARAM" is a Sad song, composed by Tony Britto, with lyrics written by Uma Devi.
Nedumaram Lyrics
Nedumaram tholainthathae
Nizhal ingu marainthathae
Koododu kuyil veezhnthathae
Pasiyinai unarnthathum
Madiyil paal suranthidum
Thaaimaikku eedethingae
Oorum thanneer kooda
Oru neram kaayum
Un paasam theeraadhamma
Kaanum mugam yaavum
Un saayal polae
Kaanal kaatchi yenoo
Nedumaram tholainthathae
Nizhal ingu marainthathae
Koododu kuyil veezhnthathae
Pasiyinai unarnthathum
Madiyil paal suranthidum
Thaaimaikku eedethingae
Pillai koovathil kallam sernthadha
Kangal thaandiyae kangai ponadha
Un vaazhthu ilaamal naan
Aagaayam ponaalumae
En thogai vaan yerumaa
Un kaalgal illaadha or
Pon veettil vaazhnthaalumae
En vaazhvu vaazhvaagumaa
Suttrum bhoomiye nee
Oottum anbil dhaanamma
Endhan vaazhkaiyae nee
Potta pichai dhaanamma
Nenjanaichi kenchidanum
Engirukka en amma
Vizhi unnai izhanthadhum
Vilakkugal anainthadhae
Irul vandhu enai soozhnthadhae
Pizhaigalai poruthidum
Valigalai thudaithidum
Thaayae un nizhal vendumae.
நெடுமரம் Lyrics in Tamil
நெடுமரம் தொலைந்ததே
நிழல் இங்கு மறைந்ததே
கூடோடு குயில் வீழ்ந்ததே
பசியினை உணர்ந்ததும்
மடியில் பால் சுரந்திடும்
தாய்மைக்கு ஈடேதிங்கே
ஊறும் தண்ணீர் கூட
ஒரு நேரம் காயும்
உன் பாசம் தீராதம்மா
காணும் முகம் யாவும்
உன் சாயல் போலே
கானல் காட்சி ஏனோ
நெடுமரம் தொலைந்ததே
நிழல் இங்கு மறைந்ததே
கூடோடு குயில் வீழ்ந்ததே
பசியினை உணர்ந்ததும்
மடியில் பால் சுரந்திடும்
தாய்மைக்கு ஈடேதிங்கே
பிள்ளை கூவத்தில் கள்ளம் சேர்ந்ததா
கண்கள் தாண்டியே கங்கை போனதா
உன் வாழ்த்து இல்லாமல் நான்
ஆகாயம் போனாலுமே
என் தோகை வான் ஏறுமா
உன் கால்கள் இல்லாத ஓர்
பொன் வீட்டில் வாழ்ந்தாலுமே
என் வாழ்வு வாழ்வாகுமா
சுற்றும் பூமியே நீ
ஊட்டும் அன்பில் தானம்மா
எந்தன் வாழ்க்கையே நீ
போட்ட பிச்சை தானம்மா
நெஞ்சணைச்சி கெஞ்சிடனும்
எங்கிருக்க என் அம்மா
bharatlyrics.com
விழி உனை இழந்ததும்
விளக்குகள் அணைந்ததே
இருள் வந்து எனை சூழ்ந்ததே
பிழைகளை பொறுத்திடும்
வலிகளை துடைத்திடும்
தாயே உன் நிழல் வேண்டுமே.