| ANNAKILI SONG LYRICS IN HINDI: This Tamil Happy song is sung by Vaaheesan Rasaiya and Kilmisha from album Tamizh Kirukkan. The music of "Annakili" song is composed by Siva Pathmayan, while the lyrics are penned by Vaaheesan Rasaiya.
அன்னக்கிளி Annakili Lyrics in Tamil
மன்னாதி மன்னனோட மயிலே
கட கண்ணால வெட்டிப்போற கயலே
உன்னால ஊஞ்சலாச்சு உயிரே
பின் பின்னால ஓடிவாரேன் அயலே
அன்னக்கிளி அசஞ்சு வந்தா
அழகா அட அழகழகா
வஞ்சிக்கொடி தூக்கணத்தில
ஜிகர்தா ஜிகு ஜிகு ஜிகுதா
அன்னக்கிளி அசஞ்சு வந்தா
அழகா அட அழகழகா
வஞ்சிக்கொடி தூக்கணத்தில
ஜிகர்தா ஜிகு ஜிகு ஜிகுதா
பொட்டழகுல கட்டழகுல
கற்பனையில கவிதை எழுதி
மான்விழி கொண்ட கார்குழலிய
காதலிச்சேன் உருகி உருகி
மன்னாதி மன்னனோட மயிலே
கட கண்ணால வெட்டிப்போற கயலே
உன்னால ஊஞ்சலாச்சு உயிரே
பின் பின்னால ஓடிவாரன் அயலே
இப்ப பார்றா
அவ கண்ணு ரெண்டும் கஞ்சா பாஞ்ச
மண்ஜாடித்தேனோ
அது பொன்னாலான மேனியின்னு
சும்மா சொல்றேனோ
பரத்கிரிக்.காம்
ஒய்யாரமா ஆடி வார
பஞ்சாரத்தேரோ கூந்தல்
பூவாலான பூங்காவனம்
எண்டா சொல்றீங்கோ
அன்னக்கிளி முத்தாயி
அவ அழகுல பித்தாயி
கழுத்தில கள்ள இடுப்புல
சிக்கி தவிக்குறன் சில்லாடி
பொன்னி நதி பெண்ணாகி
என் கூட நடக்குது எம்மாடி
அதிசய கல்யாணி இது
கனவு இல்லனு சொல்லேன்டி
பட்சியே
ஆலங்கிளி பச்சையே
இரவில நிலவ பிடிச்சு
கறைகள் துடைத்த அழகுமுகமும்
புன்முறுவல் பதித்த
உதட்டில் ஜொலிக்கும் உலக பவளம்
மூங்கில் வளைத்து பிடித்த
இடையில் அரிய துருவம்
அரிவாளின் முனையை போன்ற
கூர்மை அவளின் புருவம்
ரத்தினத்தில நான் செதுக்கிய
மாதுளம்பழ மார்பழகிய
கற்பனையில கால் வழுக்கிட
விழுந்தவன் நான் கால்கொலுசில
புதையலுக்குள்ள புதையல போல
புதைஞ்சிருக்குது என் காதல்
தமிழ் நிலத்தில காதல் மொழி சொல்ல
கையில் இருந்தது செங்காந்தள்
தோட்டாக்கள் துளைக்காத மார்பில்
தூங்கா கிளிகள் சத்தம் (ஓகே)
அடி தொட்டா சுருங்கி துள்ளும் அருவிக்கு
முத்தாய் தருவேன் முத்தம்
நெல்லோடு தென்றல் உரையாட அழகே
உன் கை ராவணனின் வீண
மானோட தோகை மயிலாட மனதில்
மழையின் தூறல்களே கீற
அவள் நடக்கும் நடையும் உடுக்கும் உடையும்
அச்சச்சச்சோ
மொழியின் அழகும் விழியின் அழகும்
அச்சச்சச்சோ
குழந்தை அழகுச் சிரிப்புச் சிரிப்பு
அச்சச்சச்சோ
என் இதயம் உடஞ்சு உடஞ்சு போச்சு
அச்சச்சச்சோ
அச்சச்சச்சச்சச்சச்சோ
அவளது கன்னங்கள் அச்சச்சச்சோ
அப்பப்பப்பப்பப்பப்போ
என்னப் பாத்து கண்ணடிப்பா அப்பப்போ
சின்னஞ்சிறு சிறு வண்ணக்கிளி ஒன்று
கூடு விட்டு வந்து என்னக் கூறுபோட்டுக்
கூட்டிக்கொண்டு போறேன் என்று
கூட நின்று ஊர விட்டு போதே…
அன்னக்கிளி அசஞ்சு வந்தா
அழகா அட அழகழகா
வஞ்சிக்கொடி தூக்கணத்தில
ஜிகர்தா ஜிகு ஜிகு ஜிகுதா
அன்னக்கிளி அசஞ்சு வந்தா
அழகா அட அழகழகா
வஞ்சிக்கொடி தூக்கணத்தில
ஜிகர்தா ஜிகு ஜிகு ஜிகுதா
அன்னக்கிளி அசஞ்சு வந்தா
வஞ்சிக்கொடி தூக்கணத்தில
அன்னக்கிளி அசஞ்சு வந்தா
அழகா அட அழகழகா
வஞ்சிக்கொடி தூக்கணத்தில
ஜிகர்தா ஜிகு ஜிகு ஜிகுதா.
