தாலாட்டு Thalaattu Lyrics - P. Susheela, Harini, K. S. Chithra

தாலாட்டு | THALAATTU SONG LYRICS IN HINDI: This Tamil Kids and Love song is sung by P. Susheela, K.S.Chithra and Harini from album Naatpadu Theral. The music of "Thalaattu" song is composed by N.R. Raghunathan, while the lyrics are penned by Vairamuthu.

Thalaattu Lyrics

Vanna vanna komalame
Valadhukai maambazhame
Inam perutha vamsamthil
Sanam perutha kudumbathil
Aaraam thirumagana
Aalavandha chozhamanna

Pulliman kombaiyile
Pulivandhu pogudhinnu
Ponvel kai vaangi
Puliyeriya vandhavane

Chitherumbu kadichalum
Chithappa varuvaaha
Thaangi thozh maatha
Thaai maaman varuvaaha

Thaathamaar thookki vacha
Thaadimudi kuththuminnu
Alli alli maarbanaikka
Aithamaar varuvaaha

Paattu palabadichu
Paal soru oottividum
Koottu kudumbamada
Kulavizhakke kannurangu
Kulavizhakke kannurangu

Chinnanjiru piraiye
Sivappukkal rathiname
Enna kalanjiyame
Aelam poo vaasagame

Appan veliyooru
Aatha thaniyaalu
Koottu kudumbam ippo
Kudai saanju ponadhada

Thaai maaman pozhappukku
Thaaravi poyittaaha
Chithappa ellarum
Seemaiyila irukkaaha

Un pola selvandhan
Ulagathila kandadhilla
En pola yezhai nee
Engachum kandadhunda

Echchi paal theerndhadhada
Irundhavarai oottivitten
Michcha paal oorumvarai
Minminiye kannurangu
Minminiye kannurangu

Maanikka maamaniye
Maarkkandan puthirane
Soru ootta sondhamilla
Thottilida pandhamilla
Naadhiyatha kudumbathil
Naayagama vandhavane

bharatlyrics.com

Aatha oru moolaiyila
Appan oru moolaiyila
Kaatha parakkuraaha
Government-u velaiyila

Video paarthabadi
Velaikkari thooliyaatta
Aadiyo kettabadi
Aadhavane kannurangu

Othaiyila porandhavane
Unakkarum thunaiyilla
Viththai yellam kaththukittu
Veli naadu poo magane

London thirumagalo
Los angels marumagalo
Peththa thaai thagappanukku
Paththirikkai kodu magane
Paththirikkai kodu magane.

தாலாட்டு Lyrics in Tamil

வண்ணவண்ணக் கோமளமே
வலதுகை மாம்பழமே
இனம்பெருத்த வம்சத்தில்
சனம்பெருத்த குடும்பத்தில்
ஆறாம் திருமகனாய்
ஆளவந்த சோழமன்னா

புள்ளிமான் கோம்பையில
புலிவந்து போகுதின்னு
பொன்வேல் கைவாங்கிப்
புலியெறிய வந்தவனே

சித்தெறும்பு கடிச்சாலும்
சித்தப்பா வருவாக
தாங்கித் தோள்மாத்தத்
தாய்மாமன் வருவாக

தாத்தாமார் தூக்கிவச்சாத்
தாடிமுடி குத்துமின்னு
அள்ளி அள்ளி மார்பணைக்க
ஐத்தமார் வருவாக

பாட்டுப் பலபடிச்சுப்
பால்சோறு ஊட்டிவிடும்
கூட்டுக் குடும்பமடா
குலவிளக்கே கண்ணுறங்கு
குலவிளக்கே கண்ணுறங்கு

பரத்கிரிக்.காம்

சின்னஞ்சிறு பிறையே
சிவப்புக்கல் ரத்தினமே
எண்ணக் களஞ்சியமே
ஏலம்பூ வாசகமே

அப்பன் வெளியூரு
ஆத்தா தனியாளு
கூட்டுக் குடும்பம் இப்போ
குடைசாஞ்சு போனதடா

தாய்மாமன் பொழப்புக்குத்
தாராவி போயிட்டாக
சித்தப்பா எல்லாரும்
சீமையில இருக்காக

ஒம்போலச் செல்வந்தன்
ஒலகத்தில் கண்டதில்ல
எம்போல ஏழையைநீ
எங்காச்சும் கண்டதுண்டா

எச்சிப்பால் தீந்ததடா
இருந்தவரை ஊட்டிவிட்டேன்
மிச்சப்பால் ஊறும்வரை
மின்மினியே கண்ணுறங்கு
மின்மினியே கண்ணுறங்கு

மாணிக்க மாமணியே
மார்க்கண்டன் புத்திரனே
சோறூட்டச் சொந்தமில்ல
தொட்டிலிட பந்தமில்ல
நாதியத்த குடும்பத்தில்
நாயகமா வந்தவனே

ஆத்தா ஒரு மூலையில
அப்பன் ஒரு மூலையில
காத்தாப் பறக்குறாக
கவர்மெண்ட்டு வேலையில

வீடியோ பார்த்தபடி
வேலைக்காரி தூளியாட்ட
ஆடியோ கேட்டபடி
ஆதவனே கண்ணுறங்கு

ஒத்தையில பொறந்தவனே
உனக்காரும் துணையில்ல
வித்தையெல்லாம் கத்துக்கிட்டு
வெளிநாடு போமகனே

லண்டன் திருமகளோ
லாஸ்ஏஞ்சல்ஸ் மருமகளோ
பெத்ததாய் தகப்பனுக்குப்
பத்திரிகை கொடுமகனே
பத்திரிகை கொடுமகனே.

Thalaattu Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *